பதினாறாவது லோக்சபா தேர்தலுக்கான வாக்களிப்பு தமிழகம், புதுச்சேரி உட்பட 11 மாநிலங்களில் காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது.
மாலை 6 மணி வரை வாக்களிப்பு நடைபெறுகிறது.
தமிழகத்தில் 5 முனைப் போட்டியும், புதுச்சேரியில் ஆறு முனைப் போட்டியும் நிலவுகிறது. மேலும் தமிழகத்தில் ஆலந்தூர் சட்டசபைக்கான இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது.
















