இலங்கையில் இருந்து இளம்பிள்ளைகளை அவுஸ்திரேலியாவிற்கு கடத்தும் கும்பல்களைக் கண்காணிக்க விசேட பொறிமுறை அவசியமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
christmas-island இத்தகைய பொறிமுறை காலத்தின் தேவையென ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்கள் தொடர்பான குழுவில் இலங்கைப் பிரதிநிதியாக கடமையாற்றும் கலாநிதி ஹிரந்தி விஜேமான்ன சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பொலிஸ் பிரிவு சமீபத்தில் பிள்ளைகளை அவுஸ்திரேலியாவிற்குக் கடத்தும் கும்பலை மடக்கிப் பிடித்திருந்தது. சிலாபம், யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 15 முதல் 16 வயதெல்லையைச் சேர்ந்த ஆண்பிள்ளைகள் அவுஸ்திரேலியாவிற்கு கடத்தப்பட்டிருந்தார்கள். அவுஸ்திரேலிய அதிகாரிகள் அவர்களைக் கைது செய்து இலங்கைக்கு திருப்பி அனுப்பியிருந்தார்கள். திருப்பி அனுப்பப்பட்டவர்களில் மூன்று போரை சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை பொறுப்பேற்றுள்ளது.
இந்தப் பிள்ளைகளின் பெற்றோர் இவர்களை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைப்பதற்காக பெருந்தொகை பணத்தை செலுத்தியிருக்கிறார்கள் எனத் தெரிகிறது.
இந்தக் கடத்தல் தொடர்பாக சிலாபம், யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் மூன்று சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
















