இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர் பில் பேசுவதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைத் தமிழரின் பிரச்சினை தீர்வுக்கு இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தது.
இந்த கடிதம் தமிழக முதல்வருக்கு கிடைக்கப்பெற்ற நிலையில், அதற்கு சாதகமான பதில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை விரைவில் தமது அலுவலகத்துக்கு அழைத்து ஜெயலலிதா பேச்சுவார்த்தை நடத்துவார் என்று முதலமைச்சர் அலுவலகத்தின் தகவல்கள் தெரிவிப்பதாக தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
















