மருத்துவர்கள், ஆசிரியர்களை இலங்கை வடகிழக்கு மாகாணங்களுக்கு அனுப்புங்கள்: சிவாஜிலிங்கம்

sivajilingamஇலங்கை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சேவை செய்ய தமிழ் பேசும் மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்களை அனுப்பி வைக்குமாறு இந்திய அரசுக்கு வடக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

கூறியிருப்பதாவது, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறையை நீக்க இந்தியாவில் இருந்து தமிழ் பேசும் மருத்துவர்களை 2 ஆண்டுகள் சேவை செய்ய அனுப்பி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் ஆங்கில, தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்கள் பற்றாக்குறையை நீக்க, இந்தியாவில் தமிழ் பேசும் ஆங்கில, தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்களையும் 2 ஆண்டுகள் சேவை செய்ய அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.

மருத்துவர்களும் ஆங்கில, தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்களும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சேவையாற்ற உரிய நடவடிக்கைகளையும் அனுமதிகளையும் வழங்கி உதவ ஏற்பாடுகள் செய்யுமாறு இந்திய அரசையும், தமிழக அரசையும், இலங்கை அரசையும் வடக்கு மாகாண சபை கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் சிவாஜிலிங்கம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags: , , ,

Leave a Reply