யூலை 23 , 31 ஆண்டுகளாகின்றது யூலைக் கலவரம் என்னும் அரச பயங்கரவாதம் நிகழ்ந்தேறி. துயரம் தோய்ந்த நம் ஈழத்தமிழினம் தன் வரலாற்றில் யூலை 83 இற்கு முன்னும் பின்னும் எத்தனையோ ஆயிரம் கோர இறப்புக்களை, சொத்துடமை இழப்புக்களைச் சந்தித்திருக்கின்றது, சந்தித்து வருகின்றது.
சொல்லப் போனால் யூலை 83 இனை ஒவ்வொரு நாளும் நம் தமிழர் தாயகம் சந்தித்து வரும் வேதனை முடிவிலாத் தொடர்கதை.
இலங்கை அரசின் இனப்படுகொலையின் ஓர் அங்கமான கறுப்பு ஜூலையின் 31ம் ஆண்டு நினைவு நிகழ்வானது, அவுஸ்ரேலியா வில் உள்ள சிட்னி துங்காபி கேட்போர் கூடதில் நினைவு கூரப்பட்டது.
இன்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் அவுஸ்ரேலியா வாழ் தமிழ் மக்கள் கனத்த நினைவுகளுடனும், மாறா வடுக்களுடனும் கலந்து கொண்டிருந்தனர்.
அவுஸ்ரேலியா வாழ் தமிழர் அமைப்புக்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இக்கவனயீர்ப்புப் நிகழ்வானது
பொதுச் சுடரேற்றலுடன், ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து அகவணக்கத்துடன் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வின் போது பல நுற்றுக் கணக்கான மக்கள் கலந்துகொண்டதுடன் மிகவும் எழிச்சியுடன் நிறைவு பெற்றது.
















