வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் இந்திய விஜயத்திற்கு இலங்கை அரசு முட்டுக்கட்டை போட்டு இறுக்கமான நடமுறையை ஏற்படுத்திவருவதாக தெரியவருகின்றது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தியாவிற்கு பயணம் செய்ய அனுமதிக்கப்படுவாரா என செய்தியாளர்கள் இலங்கை அரச பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இது குறித்து கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிக்கையில், எந்த உயர் அதிகாரியும் வெளிநாட்டு விஜயம் மேற்கொள்ளும்போது போது அவரை விடவும் உயர் அதிகாரியிடம் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும், அந்த வகையில் வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறியின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.
அனுமதியின்றி வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு எதிராக எந்த வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என அமைச்சர் கெஹலிய தெரிவித்துள்ளார்.
ஆயினுன் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் இந்திய விஜயத்திற்கு அனுமதி வழங்கப்படுமா இல்லையா என உறுதியாக எதனையும் அவர் அதில் குறிப்பிடவில்லை.
















