காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணை வடக்கில் மீண்டும் ஆரம்பம்!

missing-peoplesகாணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி விசாரணைக்குழு வடபகுதியில் இரண்டாவது தடவையாக மீண்டும் விசாரணையை ஆரம்பிக்க உள்ளது.

இந்த விசாரணையானது முழங்காவில் மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது. மேற்படி விசாரணையானது நாளை பூனகரி பிரசத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதனடிப்படியில் 27ஆம், 28ஆம், 29ஆம், 30ஆம் திகதிகளில் இந்த விசாரணையானது நடைபெறுகின்றது.

28ஆம் திகதி 6 கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த 50 பேர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

28ஆம் திகதி 2 கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த 50 பேர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான விசாரணையானது முழங்காவில் மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது.

29ஆம் திகதி எட்டு கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த 50 பேருக்கான விசாரணையும் 30ஆம் 01 கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த 30 பேருக்கான விசாரணைகள் பூநகரி பிரதேச செயலகத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது

Tags: , ,

Leave a Reply