பெரம்பலூர்: காவிரிய வச்சுக்கோ… அம்மாவை குடு… என்ற வாசகத்துடன் பேனரை பெரம்பலூர் அ.தி.மு.க.வினர் வைத்துள்ளனர்.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக தனி நீதிமன்றம் கடந்த 27 ஆம் தேதி அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் கடந்த 7 நாட்களாக அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அ.தி.மு.க. தொண்டர்கள் உண்ணாவிரதம், மனித சங்கிலி போன்ற போராட்டங்களை நடத்தி, தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும், அதிர்ச்சியின் காரணமாக மாணவிகள் உள்பட 40க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் உயிரையும் மாய்த்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், பெரம்பலூரில் ”காவிரிய வச்சுக்கோ… அம்மாவை குடு…, அம்மா… வா… தேம்பும் தமிழகம்” என்று ஒரு குழந்தை அழுவதை போன்ற படத்துடன் கூடிய பேனரை அ.தி.மு.க.வினர் வைத்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
















