தமிழக தலைவர்களை கூட்டமைப்பு எப்போதும் அரவணைத்தே செல்கின்றது! கருணாநிதிக்கு சம்பந்தன் பதில்

samba_tnaஇனப்­பி­ரச்­சினை விட­யத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எப்­போதும் தமி­ழக தலை­வர்­களை மதித்தும் அர­வ­ணைத்தும் செல்­வ­தையே தனது குறிக்­கோ­ளாகக் கொண்­டுள்­ளது. எமது நியா­ய­மான அர­சியல் தீர்­வுக்கு தமி­ழக தலை­வர்கள் தொடர்ந்தும் பங்­க­ளிப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் சிரேஷ்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா. சம்­பந்தன் தெரி­வித்தார்.
ஒரு காலத்தில் இனப்­பி­ரச்­சினை விவ­கா­ரத்தில் இலங்கை மற்றும் தமி­ழக தலை­வர்கள் மத்­தியில் கருத்து வேறு­பா­டுகள் இருந்­தி­ருக்­கலாம். தற்­போது அவ்­வா­றான நிலைமை இல்லை. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஒரு குடையின் கீழ் ஒற்­று­மை­யுடன் செயற்­பட்டு வரு­கின்­றது. அதே­வேளை தமி­ழக மக்­களின் தியா­கங்­க­ளையும் மதிக்­கின்­றது என்றும் தெரி­வித்தார்.

தமி­ழக முன்னாள் முதல்வர் கலைஞர் கரு­ணா­நிதி, தமி­ழக தலை­வர்­க­ளா­கட்டும் இலங்­கையில் உள்ள தமிழ்த் தலை­வர்­க­ளா­கட்டும் இலங்கை இனப்­பி­ரச்­சினை விட­யத்தில் ஒற்­று­மை­யாக செயற்­ப­ட­வில்லை என்­பதே எனது அபிப்­பி­ரா­ய­மென தெரி­வித்­தி­ருந்தார்.

அத்­துடன், ஒற்­று­மை­யாக செயற்­பட்­டி­ருந்தால் இவ்­வ­ளவு உயி­ரி­ழப்­புக்­க­ளையும் நஷ்­டங்­க­ளையும் தவிர்த்­தி­ருக்க முடியும் எனவும் தமி­ழக முன்னாள் முதல்­வரும் திரா­விட முன்­னேற்ற கழக தலை­வ­ரு­மான கலைஞர் கரு­ணா­நிதி குற்­றஞ்­சாட்­டி­யி­ருந்தார். இதற்கு பதி­ல­ளிக்கும் வகை­யி­லேயே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இரா.சம்­பந்தன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அண்­மையில் தமி­ழ­கத்­திற்கு வருகை தந்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தலைவர் இரா.சம்­பந்தன் உள்­ளிட்ட தலை­வர்கள் தம்மை சந்­திக்­க­வில்லை என்று கலைஞர் கரு­ணா­நிதி விசனம் தெரி­வித்­தி­ருந்­தமை தொடர்பில் அவ­ரிடம் வின­விய போது, அதற்கு பதி­ல­ளித்த இரா. சம்­பந்தன் தமி­ழக முத­ல­மைச்­சர்­க­ளாக இருந்த எம். ஜி. இரா­மச்­சந்­திரன், கலைஞர் கரு­ணா­நிதி உட்­பட அனை­வ­ரையும் நாம் தொடர்ந்து சந்­தித்து வந்­துள்ளோம்.

எனினும் அப்­போது முதல்­வ­ராக இருந்த ஜெய­ல­லிதா அம்­மை­யாரை சந்­திக்க இருந்த கார­ணத்­தினால் முதலில் முத­ல­மைச்­சரை சந்தித்து விட்டு பின்னர் ஏனைய தலைவர்களை சந்திக்கலாம் என்று இருந்தோம். எனினும் அவருடனான சந்திப்பு கைகூடவில்லை.

அதேவேளை கால தாமதம் காரணமாக இதர தலைவர்களை சந்திக்க முடியாமல் போனது என்றும் தெரிவித்தார்.

Tags: ,

Leave a Reply