மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சுக்கள் மற்றும் சுகாதார அமைச்சுக்களுக்கான வரவு செலவுதிட்ட ஒதுக்கங்கள் குறித்து விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வந்தது.
இன்றைய விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றிய ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த அலுவிஹார, மாகாண சபைகள் ஆரம்பிக்கப்பட்டு 25 வருடங்கள் ஆகின்ற போதும், அவை சுயாதீனமாக செயற்படுவதற்கு அரசாங்கம் இடமளிப்பதில்லை என்று குற்றம் சுமத்தினார்.
இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்பதை தாம் ஏற்றுக் கொள்வதாக கூறினார்.
எனினும் இந்த அரசியல் நோக்கத்துக்காக குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டாம் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
















