மகிந்த ராஜபக்ச தற்போது மாறிவிட்டார். அவர் ஒரு மனிதராக செயற்படவில்லை. அனைத்து அதிகாரங்களையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார் என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் அனைவரும் பெயருக்கு மட்டுமே அமைச்சர்களாக உள்ளனர். அமைச்சுக்களின் செயலாளர்கள், அமைச்சர்களை கேட்டு எதனையும் செய்வதில்லை. அவர்கள், அலரிமாளிகையில் இருந்து வரும் உத்தரவுகளுக்கு இணங்கவே செயற்படுகின்றனர்
அமைச்சுக்களின் செயலாளர்களது பணிகள், அலரிமாளிகையில் இருந்தே வரையறுக்கப்படுகின்றன. இந்தநிலையில் ஊழல் மற்றும் துஸ்பிரயோகத்துக்கு எதிராக தாம் குரல் கொடுத்தபோது தமக்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
















