கரன்னகொடவை கைது செய்ய முயற்சி!

போர் வெற்றிக்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவை கைது செய்வதற்கு தற்போது அரசாங்கம் முயற்சி செய்து வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சர்வதேச சக்திகளுக்கு அடிபணிகின்ற பிரிவனரே இன்று அமைச்சரவையில் இருப்பதால் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கண்டி – வத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“முப்படையினர், பொலிஸார் உட்பட அனைத்து புலனாய்வுப் பிரிவையும் இணைத்து நாங்கள் ஏற்படுத்திய பாதுகாப்புத் திட்டம் காரணமாக அனைத்து மக்களும் சமாதானமாக வாழக்கூடிய மற்றும் அபிவிருத்தியான சூழலை ஏற்படுத்த முடிந்தது.

தேசியப் பாதுகாப்பு குறித்து எந்த அறிவும் இல்லாத அமைச்சரவையை ஏற்படுத்தி அந்த அமைச்சரவை சர்வதேச சக்திகளுக்கு அடிபணிந்து மக்கள் மீது அக்கறையின்றிய போராட்டம் மீது அனுபவமில்ல அரசசார்பற்ற நிறுவனங்களுடன் தொடர்புடையவர்களே எனினும் இந்த அரசாங்கத்தில் உள்ளனர்.

இப்படியானவர்களே படையினரை சர்வதேச நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்வதற்கான வழியை ஏற்படுத்துகிறார்கள். முன்னாள் கடற்படைத் தளபதியையும் நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கப்படுவதை பத்திரிகையில் பார்த்தேன். கடற்படைத் தளபதி போர் வெற்றிக்கு எவ்வளவு அர்ப்பணிப்பு செய்தவர்.

இவற்றை அறியாதவர்களே எமது தேசிய பாதுகாப்புத் திட்டத்தை முற்றாக நிராகரித்தார்கள். புலனாய்வு அதிகாரிகளை கைது செய்து மனநிலையை உடைத்தனர்.

ஆகவேதான் சமாதானம் சீர்குலைந்து மீண்டும் குண்டு வெடித்தது. இதற்கு அரசாங்கமே பொறுப்புகூற வேண்டும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!