மனித மூளையை இணையம் மூலம் கட்டுப்படுத்தும் சோதனையில் முதல் தடவையாக வெற்றி

brainமனித மூளை­யை இணையம் மூலம் கட்­டுப்­ப­டுத்தி அவர்­களின் உடல் அசை­வினை தீர்மா­னிக்கும் சோத­னை­யொன்று அமெ­ரிக்­காவில் முதல் தட­வை­யாக வெற்­றி­க­ர­மாக மேற்­கொள்ளப்பட்­டுள்­ளது.

அமெ­ரிக்­காவின் வொஷிங்டன் பல்­க­லைக்­க­ழ­கத்தில் அண்­மையில் இச்­சோ­த­னையை ஆரா­ய்ச்­சி­யா­ளர்கள் வெற்­றி­க­ர­மாக மேற்­கொண்­டுள்­ள­ளனர். இந்த ஆராய்ச்­சியின் மூலம் அடுத்­த­வரின் மூளையை மின்
சமி­க்ஞைகள் ஊடாக கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வந்து அவரின் உடல் அசை­வு­களைக் கட்­டுப்­ப­டுத்­தலாம் எனத் நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது.

கணனி விஞ்­ஞா­னியும் பொறி­யி­லா­ள­ரு­மான பேரா­சி­ரியர் ராஜேஷ் ராஓ தனது சக ஊழி­ய­ரான ஸ்டொக்­கோ­கோவின் மூளையை வொஷிங்டன் பல்­க­லைக்­க­ழ­கத்தில் நடந்த சோத­னையில் கட்­டுப்­ப­டுத்­தி­யுள்ளார்.

இதன்­போது மின்­வாய்கள் பொருத்­தப்­பட்ட தொப்­பியை இரு­வரும் அணிந்­து­கொண்டு நேர­டித்­தொ­டர்­புகள் எது­வு­மின்றி தனித்­த­னி­யான கண­னியில் அமர்ந்­துள்­ளனர். இவர்­க­ளது மின்­வாய்­களை மின்­மூ­ளை­வ­ரை­யத்­துடன் (ஈ.ஈ.ஜீ) தொடர்­பு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இக்­க­ருவி மூலம் இணை­யத்­தி­னூ­டாக ராஜேஷ் தனது மூளை சமிக்­ஞை­களை ஸ்டொக்கின் மூளைக்கு அனுப்பி அதன் மூலம் அவ­ரது வலது கையை வீடியோ கேம் விளை­யாட அசைத்து வெற்­றி­கண்­டுள்ளார்.

இணையம் கண­னி­களை இணைப்­ப­தற்­கான வழி­யாக இருந்­தது. தற்­போது அதுவே மூளை­க­ளையும் இணைக்­கக்­கூ­டிய வழியாக உள்­ளது என ஆராய்ச்­சியில் பங்­கு­பற்­றிய அன்­ரியா ஸ்டொக்கொ எனும் ஆராய்ச்­சி­யாளர் கூறி­யுள்ளார். மூளை­யி­லி­ருந்து அறி­வைப்­பெற்று அதனை நேர­டி­யாக மூளைக்கு மூளை பரி­மாற்ற வேண்டும்.

இத்தொழில்நுட்பம் எதிர்காலத்தில் அவசர நேரத்தில் அதாவது விமானத்தை தரையிறக்குவது போன்ற செயற்பாடுகளுக்கும் இது உதவியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: ,

Leave a Reply