தமிழர் பூமியான இலங்கை யைக் கைப்பற்ற வேண்டும் என மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
தமிழர்களுக்கு சொந்தமான பூமி இலங்கை. தமிழர் பூமியான இலங்கையைக் கைப்பற்ற வேண்டும்.
இஸ்ரேல் பாலஸ்தீனம் போன்று இலங்கையில் தமிழர் பகுதியை கைப்பற்ற வேண்டும். தமிழீழ கனவு நனவாக வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என்றார்.
சுதர்சன நாச்சியப்பனின் இந்த பேட்டி காங்கிரஸார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
















