போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், பிரதேச அபிவிருத்திக்கும் என சர்வதேச நாடுகளால் வழங்கப்பட்ட அன்பளிப்புப் பொருள்களும், 2012ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான விவசாய உபகரணங்களும் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக அரச களஞ்சியசாலைகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.
இவற்றை அமைச்சர்கள் இப்போது வழங்க ஆரம் பித்துவிட்டனர். இன்னும் சில நாள்களில் ஜனா திபதியும் இந்தப் பொருள் களை ஏதோ தாமே கொடுப் பது போல் வழங்கி வாக்குப் பிச்சை கேட்பார். இதை மக் கள் நன்கறிவர்.
இவ்வாறு தெரிவித்தார் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன். தென்மராட்சியில் இடம் பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித் ததாவது:
சலுகைகள் தொடங்கி விட்டன. விளையாட்டு உபகர ணங்களும்,உதவிப்பொருள் வழங்குவதும் இப்போது நடைபெறுகின்றன. இந்தப் பொருள்கள் எல்லாம் நியாயபூர்வமாக நமக்குக் கிடைக்க வேண்டியவை. இவை கடந்த ஒரு வருடமாக அரச களஞ்சிய சாலைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொருள்கள்.
நாம் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் சிறுபான்மையினர் அல்லர். நாம் ஓர் அங்கீகரிக்கப்பட்ட தேசிய இனத்தினர். இன்றைய அரசு, தமிழ்த் தேசிய இனத்தை இல்லாதொழிக்கும் நடவடிக்கை களைத் தீவிரமாகச் செயல் படுத்துகின்றது.
திட்டமிட்ட சிங்களக் குடி யேற்றங்களை மேற்கொள் கின்றது. முன்பு கிழக்கு மாகா ணத்தில் 4 வீதமாக இருந்த சிங்களவர்கள் இப் போது 22 வீதமாக அதிகரித் துள்ளனர்.
வடக்கிலும் அத்தகைய சூழலை உருவாக்க முனை கின்றனர்.இது நமது சொந்த மண். இந்த மண்ணில் இருந்து தமிழர்களை விரட்டி யடித்து விடமுடியாது.
இந்திய வீட்டுத்திட்டம், நோர்வே வீட்டுத்திட்டம், சீனப்பாதை, இந்தியாவின் ரயில் பாதை எனப் பல திட்டங்கள் நிறை வேற்றப்படுகின்றன. இவற்றில் ஏதாவது ஒரு திட்டம் இலங்கை அரசின் சுயமான திட்டம் என்று இருக்கின்றதா? ஒன்றுகூட இல்லை. இந்த அரசு தமிழர் களுக்கு எதையுமே சுயமா கச் செய்யாது.
இதனால் தான் ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஆட்சி முறையைக் கேட்கின்றோம். இதற்கு ஒரு முதல் அத்தி பாரமாக மாகாணசபைத் தேர்தல் அமையும். தமிழ் இனம் தனித்துவமான ஓர் இனம். தனியான அரசியல், கலாசார, பொருளாதார பாரம் பரியங்களைக் கொண்ட இனம்.
நாம் தொடர்ந்தும் இரண்டாம் தரப் பிரஜை களாக வாழ முடியாது என்ற செய்தியை சர்வதேசத்திற்குச் சொல்ல வேண்டும் என்றார்.
















