விக்கினேஸ்வரனுக்கு பயப்படும் மகிந்த சகோதரர்களும் வடக்கு மக்களில் காட்டும் திடீர் பாசமும்

mahinda-basilவடபகுதியில் கூட்டமைப்புக்கு முதலமைச்சர் வேட்பாளர் இல்லை: பஷில்

விக்கினேஸ்வரனுக்கு பயப்படும் மகிந்த சகோதரர்களும் வடக்கு மக்களில் காட்டும் திடீர் பாசமும்
அபிவிருத்திமீது தமிழ் தேசியக்கூட்டமைப்பு அக்கறை கொண்டிருந்தால் வடக்கில் உள்ள ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக கூட்டமைப்பு தெரிவுசெய்திருக்கும் எனத் தெரி­வித்த பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷஇ வட­மா­கா­ணத்தில் அர­சாங்கம் மேற்­கொண்டு வரு­கின்ற அபி­வி­ருத்திப் பணி­களை மேலும் விரி­வு­ப­டுத்­து­வ­தற்கு சகல மக்­களும் ஒன்­றி­ணைந்து இந்த அர­சாங்­கத்­துக்கு ஆணையை வழங்க வேண்டும் எனவும் வேண்­டுகோள் விடுத்தார்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கு அக்­க­றை­யின்­மை­யா­லேயே இந்த நிலை காணப்­ப­டு­கின்­றது. இவர்­க­ளுக்கு அக்­கறை இருந்­தி­ருந்தால் இப்­ப­கு­தியைச் சேர்ந்த மக்­க­ளுக்கு நன்கு அறிந்த ஒரு­வரை முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக நிய­மித்து இருப்­பார்கள் எனத் தெரிவித்தார்.

வட­மா­கா­ணத்தை அபி­வி­ருத்தி செய்ய வேண்டும் என்றால் வடக்கு மாகாணம் தெரிந்த ஒரு­வரை நிய­மித்­தி­ருப்­பார்கள். தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் கூட்­ட­மைப்பின் முத­ல­மைச்சர் வேட்­பாளர் யார் என வட­மா­கா­ணத்­தி­லுள்ள பிர­தேச சபைகள், கிராம அலு­வலர் பிரி­வு­களில் தேடிய போது அவ­ரு­டைய விலாசம் எமக்குக் கிடைக்­க­வில்லைஎனவும் குறிப்பிட்டார்

இறு­தி­யாக இலங்­கையில் எப்­ப­கு­தியில் இருக்கும் எனத் தேடிய போது கொழும்பு மாவட்டம் தேர்தல் தொகுதி ஒன்றில் தேடி­ய­போது பொரளை கிராம அலு­வலர் 182 பிரிவில் சிக்மன் கேம்­பிரிஜ் பகு­தியில் இல 16 ஊ யில் ஞான­ச­பா­பதி விக்கி­னேஸ்­வ­ரனின் அடை­யாள அட்டை இலக்கம் காணப்­பட்­டது. 4 இலட்சம் வாக்­காளர் உள்ள
வட­மா­கா­ணத்தில் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­பிற்கு யாழ்ப்­பா­ணத்தில் ஒரு­வரை முத­ல­மைச்­ச­ராக நிய­மிக்க முடி­யா­துள்­ளது என்றார்.

முடி­யு­மானால் கூட்­ட­மைப்­பி­ன­ரிடம் அராலி பாலம், தொண்­ட­மா­னா­று­பா­லத்தில் எத்­தனை வான் கத­வுகள் உள்­ளது எனக்­கேட்டுப் பாருங்கள். அவர்­க­ளுக்குத் தெரி­யாது. ஆனால் எனக்கு அது நன்கு தெரியும். நான் தான் அங்கு சென்று புன­ர­மைப்பு செய்தேன். யாழ்.குடாவில் எத்­தனை தீவுகள் உள்­ளன என முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ருக்குத் தெரியுமா? இதனால் வடக்கின் நியாய தர்மம் மீறப்பட்டுள்ளது எனவும் பசில் ராஜபக்ச சுட்டிக்காட்னார்.

Tags: ,

Leave a Reply