வட மாகாண சபைத் தேர்தல் கடமைகளில் பொலிஸார் மற்றும் அரச அதிகாரிகள் ஒழுங்கு விதிகளுக்கேற்ப செயற்படுகின்றார்களா என்பதை கண்காணிக்கும் பணியில் ஈடுபடவுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிகளுக்கு ஆணையாளர் கலாநிதி பிரதீப மகாநாமதேவ தலைமை தாங்கவுள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை பணிகளை ஆரம்பிக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் நடவடிக்கைக்கு தலைமை தாங்குவதற்காக அவர் யாழ்ப்பாணம் வருகைதரவுள்ளார்.
வட மாகாண சபைத் தேர்தல் நீதியானதும், நியாயமானதுமாக மனித உரிமை
நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்கில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தமது கண்காணிப்பு பணிகளை விஸ்தரித்துள்ளது.
மக்களுக்கு சுதந்திரமும், நீதியானதுமான தேர்தலை நிலை நிறுத்துவதற்குத் தேர்தல் சட்டம் மற்றும் ஏனைய நடைமுறையிலுள்ள ஒழுங்குவிதிகளிற்கேற்ப அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸாரின் செயற்பாடுகள் காணப்படுகின்றதா என்பதைக் கண்காணித்து தேவையான தலையீடுகளை மேற்கொள்வதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட உத்தியோகத்தர்கள் தேர்தல் சட்டங்களை மீறுவது தொடர்பில் முறைப்பாடுகளைச் செய்வதற்கான தொலைபேசி அழைப்பு இலக்கங்கள் வருமாறு:
அவசர அழைப்பு 1996, தொலைபேசி 0718139438, பிராந்திய நிலையங்கள் – யாழ்ப்பாணம் – 021 222 2021, வவுனியா – 024 222 2029
















