எமது பிரதிநிதிகளுக்கு வாக்களித்தோம். – வடக்கு மக்கள் கருத்து

tamilpeopleதமிழ் மக்­களின் உரி­மை­களை வென்றெடுக்க வேண்­டு­மாயின் வீட்டுச் சின்­னத்­திற்கே வாக்­க­ளிக்­க­வேண்டும் எனவும் யுத்­தத்­திற்குப் பின்னர் எமக்­காக இந்த அர­சாங்கம் எந்­த­வொரு அபி­வி­ருத்­தி­யையும் மேற்­கொள்­ள­வில்லை. இதனால் தொடர்ந்தும் இந்த அர­சாங்­கத்­திடம் ஏமா­ற­மு­டி­யாது என வடக்குத் தேர்­தலில் வாக்­க­ளித்த பின் மக்கள் தெரி­வித்­தனர்.

நாம் இத்­தேர்­தலில் வீட்டுச் சின்­னத்­திற்கு வாக்­க­ளித்­துள்ளோம். தமிழ் மக்­களின் உரி­மை­களைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­காக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் தொடர்ந்தும் முயற்­சித்து வரு­கின்­றனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இறுதி யுத்­தத்தின் போது நாம் முள்­ளி­வாய்க்கால் பகு­தியில் இருந்து எமது உட­மை­களை எடுத்­து­வ­ர­வில்லை. அதனை இந்த அர­சாங்கம் அனு­ம­திக்­க­வில்லை. இவ்­வாறு போரால் பாதிப்­ப­டைந்­துள்ள எமக்­கான வாழ்­வா­தார முன்­னேற்­றத்­திற்கும் இந்த அர­சாங்கம் எதை­யுமே வழங்­க­வில்லை. அபி­வி­ருத்தி எனக் கூறி வீதி­களை மட்­டுமே போடு­கின்­றனர் எனவும் குறிப்பட்டனர்.

எமது பொரு­ளா­தார முன்­னேற்­றத்­திற்கு எது­வுமே இந்த அர­சாங்­கத்தால் செய்­யப்­ப­ட­வில்லை. தற்­பொ­ழுதும் அபி­வி­ருத்­தி­களைக் காட்டி எம்மை ஏமாற்­று­கின்­றனர். இதனால் எமக்­கான நிரந்­த­ர­மான அர­சியல் தீர்­வினைப் பெற்­றுக்­கொள்ளும் நோக்­குடன் வீட்டுச் சின்­னத்தில் போட்­டி­யிட்ட கூட்­ட­மைப்­பிற்கு வாக்­க­ளித்­துள்ளோம் என்­றனர் மக்கள்.

Tags: , , ,

Leave a Reply