இலங்கை தொடர்பான நவிப்பிள்ளையின் அறிக்கையை அமெரிக்கா ஏற்பு

usa-flagஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை தொடர்பிலான நேரடி அறிக்கையினை அமெரிக்க ராஜாங்க திணைக்களம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி இலங்கையில் ஏற்பட்டுள்ள பேச்சு சுதந்திரம் மறுப்பு, ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தில்கள், சட்ட ரீதியான விடயங்களில் தலையீடு உள்ளிட்ட பல விடயங்களுக்கு அமெரிக்கா இணக்கம் வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நடந்து முடிந்த மனித உரிமைப் பேரவையில் கடந்த 25 ஆம் திகதி தனது வாய்மொழி மூல அறிக்கையை சமர்ப்பித்திருந்தார்.

அதில் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இலங்கை அரசாங்கம் தமது நாட்டின் மனித உரிமை பிரச்சினைகளை சிறந்த மட்டத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவ்வாறான உரிய முனைப்புகள் மேற்கொள்ளப்படாது போனால் சர்வதேச பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டியது சர்வதேச சமூகத்தின் கடமை எனவும் அவர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: , , ,

Leave a Reply