கிளர்ச்சியாளர்கள் ஆயுதங்களை கீழே வைத்தால் சமரச பேச்சுவார்த்தைக்கு தயார் என சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஷாத் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் ஜனாதிபதி அஷாத்துக்கு எதிராக சுமார் 3 ஆண்டுகளாக நடைபெற்று வரும் கிளர்ச்சியில் ஒரு இலட்சம் மக்கள் பலியாகி விட்டனர். அமெரிக்கா கொடுத்த நெருக்கடியால் இரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க அஷாத் சம்மதம் தெரிவித்தார். ஆனாலும் அங்கு உள்நாட்டு போர் நீடித்து வருகிறது.
இதற்கிடையில் ஜேர்மனியில் பத்திரிகைக்கு ஜனாதிபதி பஷர் அல் அஷாத் அளித்த சிறப்பு பேட்டியில் கிளர்ச்சியாளருக்கு நிபந்தனை விதித்துள்ளார். ‘சிரியா பிரச்சினையில் தீர்வு ஏற்பட வழி இருக்கிறது.
கிளர்ச்சியாளர்கள் முதலில் ஆயுதங்களை கீழே போட்டால் சமசர பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு அவர், ‘இன்னும் முடிவு செய்யவில்லை, அது பரிசீலனையில் இருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
















