பொதுமக்கள் மீது அழுத்தங்களை பிரயோகிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – பொலிஸ் மா அதிபர்

நாடாளாவிய ரீதியில் இன்று ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஹர்த்தாலில் பங்கேற்குமாறு  பொது மக்களை கட்டாயப்படுத்துபவர்கள்   மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மக்களின் உரிமைகளை மதித்து செயற்படுவதுடன்  அவர்களுக்கு   இடையூறு  ஏற்படுத்தப்பட மாட்டாது எனவும்  பொலிஸ் ஊடகப்பிரவு தெரிவித்துள்ளது.

 இதேவேளை ஹர்த்தால் நடவடிக்கையில்    பங்கேற்குமாறு பல்வேறு வர்த்தகர்கள் மற்றும் தனிநபர்களுக்கு  ஒரு சில குழுக்கள் வழங்குவதாக தெரியவந்துள்ளதாக  சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

 அத்துடன் பொதுமக்கள் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும்  நபர்களுக்கு    எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும்  சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மேலும்  தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!