தம்பிக்கு அமைச்சுப் பதவி கேட்டது உண்மை தான்; சுரேஷ் எம்.பி.தெரிவிப்பு

Suresh-Premachandran3“நான் எனது தம்பிக்கு அமைச்சுப் பதவி கேட்டது உண்மை தான். ஆனால் நான் ஏன் அவ்வாறு கேட்டேன் என்பதையும் முதலமைச்சர் சேர்த்துச் சொல்லியிருக்க வேண்டும்”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல். எவ் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

“சுரேஷ் தனது தம்பிக்கு எழுத்து மூலம் அமைச்சுப் பதவி கேட்டிருந்தார். அது வழங்கப்படவில்லை என்ற மனவருத்தத்தில் அவர் பதவியேற்பில் பங்கேற்காமல் விட்டிருக்கலாம்” என்று முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

அது தொடர்பாக சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதில் அளித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

கடந்த மாதம் 21ஆம் திகதி தேர்தல் முடிவுகள் வந்திருந்தது. அமைச்சுகள் அறிவிக்கப்படும்வரை தொடர்ச்சியாகப் பல கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர்.

நாம் எமக்கான அமைச்சை முல்லைத்தீவுக்கே கோரியிருந்தோம். அவர்கள் ஒவ்வொரு சாக்குப் போக்குச் சொல்லி இழுத்தடித்தார்கள். இவர்கள் தொடர்ச்சியாக ஒவ்வொன்றுக்கும் மறுத்து வந்தமையால், இயல்பாகவே எனது தம்பிக்கு அமைச்சுப் பதவி கேட்டேன் – என்றார்.

Tags: , ,

Leave a Reply