பொது நலவாய அரச தலைவர் உச்சி மாநாட்டினை ஆதரிக்கும் எண்ணம் எமக்கு இல்லை. அர்த்தமில்லாத அரசாங்க செயற்பாடுகளில் ஒன்றாகவே இந்த உச்சி மாநாடும் அமைந்துள்ளது என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்துள்ளது.
பொது நலவாய உச்சி மாநாடு தொடர்பில் இனிமேல் எவ்விதக் கருத்துக்களையும் தெரிவிக்கப் போவதில்லை எனவும் அக் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவிக்கையில்,
பொது நலவாய அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் பிரித்தானிய இளவரசர் கலந்து கொள்வதாக தகவல்கள் தெரியவந்துள்ளன. எனவே இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் எமது விரோதத்தினை வெளிப்படுத்துவதில்லை என்ற முடிவிலேயே எமது கட்சி உள்ளது. அதேபோல் இம் மாநாட்டினை ஆதரிக்கும் எண்ணமும் எமக்கில்லை.
இம் மாநாட்டு காலப் பகுதிகளில் எதிர்க்கட்சிகள் தமது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளப் போவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் நாம் எந்தக் கட்சிகளோடும் இணைந்து எமது எதிர்ப்பினை வெளிப்படுத்தப் போவதில்லை. நாம் தனியான கொள்கையிலேயே எமது செயற்பாடுகள் அனைத்தையும் செய்து வருகின்றோம். இவ் விடயத்திலும் நாம் தனித்தே செயற்படுவோம்.
அரசாங்கம் செய்யும் அர்த்தமில்லாத வேலைத்திட்டங்களில் ஒன்றாகவே இல ங்கையில் நடத்தப்படும் இப் பொது நலவாய உச்சி மாநாடும் அமைந்துள்ளது. எனவே, இது தொடர்பில் கவனிக்க வேண்டியதொரு அவசியம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவிக்கையில்,
நாட்டின் பொருளாதார மற்றும் வாழ்வாதார சிக்கல்கள் காணப்படுகின்ற நிலையில் அரசாங்கம் கோடிக் கணக்கில் பணத்தை செலவழித்து மாநாடு நடத்துகின்றது.
தொடர் விலையேற்றங்களை செய்யும் அரசாங்கம் இம் மாநாட்டின் பின்னர் மேலும் இரு மடங்கு விலை உயர்வினை மேற்கொள்ளப் போகின்றது. மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை கண்டு கொள்ளாது. மக்களுக்கான நிவாரணங்களை வழங்காத அரசாங்கம் தமது கௌரவத்திற்காகவே இவ் உச்சி மாநாட்டினை நடத்த முயற்சித்து வருகின்றது.
நாம் எம்போதும் அரசாங்கத்தின் மோசமான செயற்பாடுகளை எதிர்க்கின்றோம். பொது நலவாய மாநாடு தொடர்பில் முன்னதாகவே எமது எதிர்ப்பினை தெரிவித்துவிட்டோம்.
எனவே, இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துக்களை தெரிவிப்பதில் அர்த்த மில்லை. அரசாங்கம் எப்போதும் நன் மை களைச் செய்யப் போவதில்லை என வும் அவர் தெரிவித்தார்.
















