அர­சாங்கம் வடக்கில் சிங்­கள மக்­களை திட்­ட­மிட்டு குடி­யேற்­றினால் அது தவறு: ஜே.வி.பி.

tilvin-silva-jvpஅர­சாங்கம் திட்­ட­மிட்டு வட மாகா­ணத்தில் இன­வாத ரீதியில் பலாத்­கா­ர­மாக சிங்­கள மக்­களை குடி­யேற்­றினால் அது பிழை­யான செய­லாகும். இதனை எதிர்க்­கிறோம். இவ்­வாறு இடம்­பெற்றால் கூட்­ட­மைப்பு அதனை தமிழ் இன­வா­தத்­திற்கு பயன்­ப­டுத்தும் என ஜே.வி.பி.யின் பொதுச்­செ­ய­லாளர் ரில்வின் சில்வா தெரி­வித்தார்.

வட­மா­கா­ணத்தில் மட்­டு­மல்ல ஆளு­ந­ராக நாட்டில் எங்கும் சிவில் நிர்­வா­கத்தில் ஓய்வு பெற்ற இரா­ணுவ அதி­கா­ரிகள் நிய­மிக்­கப்­ப­டு­வதை எதிர்ப்­ப­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

இது தொடர்­பாக ரில்வின் சில்வா மேலும் தகவல் தரு­கையில்,

வட மாகா­ணத்தில் அர­சாங்­கமும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­னரும் மேற்­கொள்ளும் நட­வ­டிக்­கை­களை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. வட­மா­காண ஆளு­ந­ராக ஓய்வு பெற்ற இரா­ணுவ அதி­காரி நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­மையை எதிர்க்­கின்றோம். அங்கு மட்­டு­மல்ல நாட்டில் எப்­பி­ர­தே­சத்­திலும் ஓய்வு பெற்ற இரா­ணுவ அதி­கா­ரி­களை சிவில் நட­வ­டிக்­கை­க­ளுக்கு நிய­மிப்­பதை எதிர்க்­கின்றோம். அதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. ஆனால் அர­சாங்கம் இவ்­வா­றான செயற்­பாட்டை முன்­னெ­டுப்­பதை காண முடி­ய­வில்லை. சிவில் நட­வ­டிக்­கை­க­ளுக்கு பொறுப்­பாக இரா­ணுவ அதி­கா­ரி­களை நிய­மித்து நாட்டை இரா­ணுவ மய­மாக்கும் திட்­டத்­தையே அர­சாங்கம் முன்­னெ­டுக்­கின்­றது.

அதே­வேளை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் வட மாகாண மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கு முன்­னு­ரிமை வழங்­க­வில்லை. மாறாக தமிழ் மக்­களின் பிரச்­சி­னையை மறைத்துக் கொண்டு வெளி­நாட்டுப் பய­ணங்­க­ளையும் தமக்­கான சிறப்­பு­ரி­மை­க­ளையும் சலு­கை­க­ளையும் பெற்­றுக்­கொண்டு அர­சியல் குளிர் காயவே நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கின்­றது. அது மட்­டு­மல்­லாது இந்­தி­யாவின் அர­சியல் பொரு­ளா­தார தேவை­களை நிறை­வேற்­று­கின்­றது.

அர­சாங்கம் திட்­ட­மிட்டு பலாத்­கா­ர­மாக சிங்­கள மக்­களை வடக்கில் குடி­யேற்­று­வது பிழை­யான விட­ய­மாகும். இவ்­வாறு இடம்­பெற்றால் கூட்­ட­மைப்பு தமது தமிழ் இன­வா­தத்­திற்கு உந்து சக்­தி­யாக அதனை பயன்­ப­டுத்தும். அரசு சிங்­கள இன­வா­தத்­தையும் கூட்­ட­மைப்பு தமிழ் இன­வா­தத்­தையும் நடை­மு­றைப்­ப­டுத்­து­கின்­றன.

தமிழ் மக்­க­ளா­கட்டும் சிங்­கள, முஸ்லிம் மக்­க­ளா­கட்டும் இந்நாட்டில் அனைவரும் தமது சுயவிருப்பத்தின் பிரகாரம் எங்கும் வாழ முடியும். அதற்கு தடை போட முடியாது.பலாத்காரமாக இனவாதக் குடியேற்றமே பிழையான செயலாகும்.

இவ்வாறு இனவாதம் தொடருமானால் மீண்டும் பிரிவினை வாதம் தலைதூக்கும் என்றும் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply