புதுக்குடியிருப்பு, தேராவில் உடையார்கட்டு பிரதேசத்தில் பொல்லினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் 62 வயதான காந்தன் வீரசிங்கம் என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் தனது மகளது கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையின் போது தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.
இந்நிலையில் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
சடலம் மீதான பிரேத பரிசோதனை கிளிநொச்சி வைத்தியசாலையில் இடம்பெற்று சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வயோதிபர் மீது தாக்குதலை மேற்கொண்ட மருமகனை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
















