இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பு உரிய முறையில் செயற்படவில்லை என அமைப்பின் பொதுச் செயலளார் பான் கீ மூன் மீண்டும் ஒப்புக்கொண்டுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பு மனிதாபிமான மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் தோல்வியைத் தழுவியதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கை இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பின் பணிகள் குறித்து நடத்தப்பட்ட மீளாய்வின் போது, உரிய முறையில் கடமையாற்றவில்லை என்பது வெளிப்படுத்தப்பட்டிருந்தது. எதிர்காலத்தில் இவ்வாறான சிக்கல்கள் ஏற்படுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பான் கீ உறுதியளித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் நோக்கங்களைப் பூர்த்தி செய்து கொள்ள உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பு அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
















