கமரூனைச் சந்திக்க மறுப்பு தெரிவிக்கிறது மகிந்த அரசு

uk-Prime-Minister-Davidபொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நாளை இலங்கைக்கு வருகை தரவுள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனை சந்திக்க ஜனாதிபதி மகிந்த இணக்கம் தெரிவிக்கவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் கமரூன் கலந்து கொண்ட பின்னர் தன்னுடன் தனியான சந்திப்புக்கு இன்னும் மகிந்த ராஜபக்ச இணக்கம் தெரிவிக்கவில்லையனெ கமருன் குறிப்பிட்டுள்ளார்.

தனது பயணத்தின் போது ஜனாதிபதி ராஜபக்சவைச் சந்தித்து படையினரால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் ஆட்கடத்தல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்ப பிரித்தானியப் பிரதமர் திட்டமிட்டுள்ளார்.

பிரித்தானியப் பிரதமர் மகிந்தவை சந்திக்கும் விடயத்தில் பிரித்தானியா தெளிவாக உள்ளது என்றும் அதற்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று நம்புவதாகவும; பிரித்தானியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் இலங்கை அதற்கு உடன்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

Tags: , ,

Leave a Reply