கண்ணீர் விட்டழுத சனல் 4

chennal4-jaffnaயாழ்ப்பாணம் வருகை தந்த சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் ஜோண் சோ மக்களின் துன்பங்களைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

நேற்று யாழ்பாணம் சென்ற பிரிட்டன் பிரதமருடன் சனல் 4 ஊடகவியலாளர்களும் வருகை தந்திருந்தனர்.

காணாமல் போனவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தினைப் பார்வையிட்ட சனல் 4 ஊடகவியலாளர் ஜோண் சோ மக்களை ஆரத்தழுவி கண்ணீர் விட்டழுதுள்ளார்.

பிரிட்டன் பிரதமரைச் சந்திப்பதற்காக வருகை தந்திருந்த மக்களை பொலிஸார் தடுத்ததையடுத்து அவர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் பெற்றுக்கொண்டு உடனடியாக பிரிட்டன் பிரதமரின் உதவியாளரிடம் அந்த கோரிக்கையை சமர்பித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply