வட மாகாணத்தில் யுத்தம் காரணமாக பாதிப்புகளுக்குள்ளானவர்களுக்கு நஸ்டஈடு வழங்கும் நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (19.11) இடம்பெற்றது.
புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சும் புனர்வாழ்வு அதிகாரசபையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந் நிகழ்வில் வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 336 பேருக்கு 28 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டது.
1990 ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் இழப்புகளுக்கான நஸ்டஈட்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் இன்றைய தினம் நஸ்டஈடு வழங்கப்பட்டது.
இதேவேளை இந் நிகழ்வில் யுத்தம் காரணமாக சேதமடைந்த பௌத்த, இந்து, கிறிஸ்தவ ஆலயங்களுக்கும் நிதியுதவி வழங்கப்பட்டது.
இதன்போது புனர்வாழ்வு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர, வர்த்தக வாணிபத் துறை அமைச்சர் ரிசாட் பதியுர்தீன், புனர்வாழ்வு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் சந்திரசிறி முத்துக்குமார, வவுனியா அரசாங்க அதிபர் பந்துல கரிச்சந்திர, பிரதேச செயலாளர் க. உதயராசா உட்பட பலர் கலந்துகொண்டடிருந்தனர்.




















