அடிப்படைவசதிகளற்ற நிலையில் மரநிழலின் கீழ் புதுக்குடியிருப்பு பொதுச்சந்தை! வடமாணகசபை உறுப்பினர் சி.சிவமோகன் குற்றச்சாட்டு

sivamokanயுத்தம் முடிவடைந்து புதுக்குடியிருப்பு மக்கள் தற்போது மீள்குடியேறியுள்ள நிலையில் அப் பகுதியில் பொதுச் சந்தைக் கட்டிடம் இல்லாமல் சந்தையானது மரநிழலின் கீழ் இயங்குவதாக வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியக் கலாநிதி சி.சிவமோகன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது,

இன்று யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்த நிலையிலும் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு பொதுச்சந்தைக் கட்டிடமானது அமைத்துக் கொடுக்கப்படவில்லை. இதனால் மரநிழலின் கீழே பொதுச் சந்தையானது இயங்கி வருகின்றது. மழை காலம் தொடங்கியுள்ளமையால் சதுப்பு நிலத்தில் மரநிழலின் கீழ் இருந்து வியாபரிகளும் மக்களும் சந்தையில் பெரும் சிரமங்களை எதிர் கொண்டு வருவதுடன் தமது பொருட்களை பாதுகாக்க முடியாதும் கஸ்ரப்பட்டு வருகின்றனர்.

யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் 1996 ஆம் ஆண்டு விமானத் தாக்குதல் காரணமாக முழுமையாக அழிவடைந்த இப் பொதுச் சந்தைக்கட்டினமானது இன்று வரை அமைக்கப்படவில்லை. முல்லைத்தீவு மாவட்டத்திற்குரிய பிரதேச சபைகளுக்கு கிடைக்கும் வருமானத்தில் இப் பொதுசந்தையூடாகவே அதிக வருமானம் கிடைக்கின்றது. இதனால் தமது வாழ்வாதாரத்தையும் கவனத்தில் கொண்டு புதுக்குடியிருப்பு பொதுச்சந்தைக்கு நிரந்தர கட்டிடம் ஒன்றினை அமைத்துத் தருமாறு அப் பகுதி மக்கள் கோரிக்கை விட்டுள்ளனர்.

மக்களின் தேவையையும் அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சனையையும் கருத்தில் கொண்டும், 2014 ஆம் வடமாகாணசபை தனது வரவு செலவுத் திட்டத்திலும் இது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் எனவும், இது தொடர்பில் மாகாணசபையில் தெரியப்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Tags: , ,

Leave a Reply