கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பழ.நெடுமாறன் உள்பட 85 பேருக்கு பிணை வழங்கி மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி இரவு 10 மணிக்கு மேல் ஒலி பெருக்கி இயக்கிய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
















