கடந்த தேர்தல்களில் தோல்விகளை சந்தித்த அரசியல் கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து அரசின் கொள்கைகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என பொருளதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
சில அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கிகள் பூஜ்ஜியத்தை அடைந்துள்ளன. இந்த அரசியல் கட்சிகள் அரசுடன் இணைவதன் மூலம் அவர்கள் இழந்த ஆதரவை மீண்டும் பெறமுடியும்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எப்பொழுதும் மக்களின் ஆதரவை நம்பியே இருக்கின்றார் என அவர் சுட்டிக்காட்டியதுடன்.
பல தேர்தல்களின் மக்கள் அவருக்கு ஆணையை வழங்கியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
















