அனைத்துலக கடல் எல்லைச் சட்டங்களை மீறி, இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழையும் எந்தவொரு மீன்பிடிப் படகும் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் ராஜித சேனாரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
மீன்பிடிப் படகுகளில் உள்ள மீனவர்கள் அனைத்துலக சட்டங்களுக்கு இணங்க நடந்து கொள்ள வேண்டும்.
191 இலங்கை மீனவர்களையும், 36 படகுகளையும் இந்தியா தடுத்து இந்தியாவின் விவசாய அமைச்சர் சரத்பவாருடன் மீனவர்களின் பிரச்சினை குறித்து பேச்சுவதற்கு அடுத்தமாதம் புதுடெல்லி வருமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் அழைப்பு விடுத்துள்ளார்.
191 இலங்கை மீனவர்களையும், 36 படகுகளையும் இந்தியா தடுத்து வைத்துள்ளது.
















