யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலத்தில் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் 170 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுளளதாக யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் முகமட்ஜெப்ரி தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களுக்கும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்குமிடையே வாரந்தம் இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அடித்துக் காயப்படுத்திய சம்பவங்கள் தொடர்பாக 13 பேர், குடிபோதையில் வாகனம் செலுத்தியமையால் 09 பேர், சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்றது சம்பந்தமாக 15 பேர், பொது இடத்தில் மது அருந்தியது சம்பந்தமாக 04 பேர், பொது மக்களுக்கு இடையூறாக கலகம் விளைவித்தமை சம்பந்தமாக 02 பேர், சந்தேகத்தின்பெயரில் 08 பேர், பிடியாணை சம்பந்தமாக 20 பேர், வீதி விபத்து சம்பந்தமாக 05 பேர், சுற்றுச் சூழல் பாதுகாப்பின்மை காரணமாக 02 பேர், சட்டவிரோதமான முறையில் மின் இணைப்பு பெற்றமையால் 04 பேர் மற்றும் குற்றச்செயல்கள் சம்பந்தமாக 17 பேரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் பாரிய குற்றங்கள் சம்பந்தமாக 07 பேர், சட்டவிரோதமான முறையில் மது விற்பனை செய்தமை சம்பந்தமாக 08 பேர், பிடியாணை சம்பந்தமாக 07 பேர், சந்தேகத்தின்பெயரில் 04 பேர், குடிபோதையில் வாகனம் செலுத்தியது சம்பந்தமாக ஒருவரும் ஏனைய குற்றங்கள் சம்பந்தமாக 44 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
















