அடுத்த பிரதமர் யார்? அரசுக்குள் குழப்பம்

srilanka-logoபிரதமர் பதவிக்கு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் வெற்றிடம் ஏற்படுமானால் அந்தப் பதவிக்கு அடுத்து யாரை நியமிப்பது என்பது தொடர்பில் அரசுக்குள் தற்போது பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து அறிய முடிகிறது.

இந்தப் பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதால் அடுத்த பிரதமராக யாரை நியமிப்பது என்ற விடயத்தில் அரச தலைமைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதனால், கட்சி உறுப்பினர்களின் கருத்துக்கள் கோரப்பட்டுள்ளதாகவும், இதன் அடிப்படையிலேயே இது விடயத்தில் இறுதி முடிவொன்று எடுக்கப்படும் என்றும் அரச தரப்பு வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

ஆரம்பம் முதலே சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் ஒருவருக்கே பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற வாதத்தை சிலர் முன்வைத்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சர்களான பஸில் ராஜபக்­, நிமல்சிறிபாலடி சில்வா, மைத்திரிபால சிறிசேன, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், அநுர பிரியதர்சன யாப்பா ஆகியோரின் பெயர்களே அரசின் உத்தேசப் பிரதமர் பட்டியலில் இருப்பதாகவும் தெரியவருகிறது.

அதேவேளை, தேர்தல்கள் நடைபெறவுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் அடுத்தப் பிரதமர் யார் என்று அறிவித்தால் அது அரசுக்குள் மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதால் மாகாண சபைத் தேர்தல்கள் முடிவடையும் வரை புதிய பிரதமர் பெயர் விவரத்தை அரசு அறிவிக்காது என்றும் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

Tags: ,

Leave a Reply