முள்ளிவாய்க்கால் நினைவு பூங்காவினை தஞ்சையில் அமைப்பதற்கு உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் நிதி திரட்டும் செயற்பாட்டினை தமிழகத்தில் தொடங்கியுள்ளார்.
தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த பூங்கா இடிக்கப்பட்டதை அடுத்து பழ.நெடுமாறன் மீண்டும் பூங்கா அமைக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
அதன்படி அதனை அமைப்பதற்காக நேற்றைய தினம் நெடுமாறன் உள்ளிட்ட குழுவினர் தமிழகத்தில் நிதி திரட்டப்படும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய ரயில் நிலையத்திலேயே நேற்று இந்த ஆரம்ப நடவடிக்கை இடம்பெற்றது. அதன்படி பயணிகள், பொதுமக்கள் உள்பட பலரும் நிதி வழங்கினார்கள்.
மேலும் குறித்த நிதி சேகரிப்பானது இன்றும் நடைபெறவுள்ளதாக அறிவுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கப்படுகின்றது.
















