இலங்கைக் கடற்படையினரிடம் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்குத் தமிழக மீனவர்களுக்குத் துப்பாக்கி வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
மீனவர்கள் பிரச்சினையைத் தீர்க்கவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும் மீனவ மக்களுக்குத் துப்பாக்கி வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் மீனவர்கள் நலன் பாதுகாக்க மீனவர் பாதுகாப்புப் படை ஒன்று அமைக்கப்பட வேண்டும்.
உலகிலேயே 5ஆவது இடத்தில் இருக்கும் மிகப் பெரிய இந்தியக் கடற்படை தமிழக மீனவர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது.
தமிழர் விரோதப் போக்கையே இந்திய மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்குரிய பயனை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் புரிந்துகொள்வார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
















