வடக்கு மாகாணசபை அமர்வுகளில் இதுவரை நிறைவேற்றப்பட்ட எந்தவொரு தீர்மானங்களுக்கும், நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு அனுப்பிய கடிதங்களுக்கும் இதுவரை பதில் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் முதன் முறையாக நடத்தப்பட்டுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்தச் சபையை பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது.
இதுவரை வரவு செலவுக்கூட்டத் தொடர் உள்ளிட்ட மூன்று கூட்டத் தொடர்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
இந்த மூன்று கூட்டத் தொடர்க ளிலும் பல்வேறு உறுப்பினர் களாலும் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்களை நடைமுறைப்ப டுத்த வேண்டிய திணைக் களங்களுக்கு அவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு அனுப்பி வைக்கப் பட்ட தீர்மானங்கள் தொடர் பில் எவ்வாறான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டுள் ளன என்பது தொடர்பில் இதுவரையில் எந்தவொரு திணைக்களத்தினாலும் மாகாணசபைக்குப் பதில் வழங்கப்படவில்லை.
பாடசாலையிலிருந்து இரா ணுவ வெளியேற்றம், சிவில் ஆளுநர் வடக்குக்கு நியமிக் கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















