அனந்தியை அச்சுறுத்துவது இன விரிசலை விரிவாக்கும்; சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. அறிக்கை

suresh-premachandran1வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனை புனர்வாழ்வுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறி அவரை அச்சுறுத்த முயற்சிப்பது இனங்களுக்கு இடையில் மேலும் விரிசல்களையும் நம்பிக்கையீனங்களையும் உருவாக்கும். இவ்வாறு தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் அனந்தியை புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறினார் என்று வெளியான செய்தி தொடர்பில் சுரேஷ் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

“அனந்தியின் கணவரான சசிதரன் இராணுவத்திடம் சரணடைந்தபோதும் அவருக்கு என்ன ஆனது என்று இதுவரையில் தெரியவில்லை. எனவேதான் அவர் தன்னைப் போன்று பாதிக்கப்பட்டவர்களுக்காகப் போராடுகிறார். அது அவரது கடமையும் உரிமையும் ஆகும். இதைப் பாதுகாப்பு அமைச்சும் ஆங்கிலத் தினசரிகளும் புரிந்து கொள்ள வேண்டும்” என்று அந்த அறிக்கையில் சுரேஷ் குறிப்பிட்டுள்ளார்.

பெண் என்பதற்காக அனந்தியை உருட்டி, மிரட்டி பணிய வைக்க முயற்சிப்பதும் அச்சுறுத்துவதும் ஜனநாயகத்துக்கு முரணானது என்றும் அவர் கண்டித்துள்ளார்.

“அவரை அச்சுறுத்துவதை விடுத்து அவரது கோரிக்கைகளின் நியாயங்களைப் புரிந்து கொண்டு அவரது கணவர் உட்பட காணாமற்போனவர்களைக் கண்டுபிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவர் கேட்டுள்ளார்.

அனந்தியை அச்சுறுத்த முயற்சிப்பது அரசின் முட்டாள்தனமான நடவடிக்கை என்றும் குறிப்பிடத் தவறவில்லை.

Tags: , , ,

Leave a Reply