ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதில் USA உம், UK யும் தீவிரம்

USandUKஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதில் அமெரிக்காவும், பிரித்தானியாவும் தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீர்மானத்திற்கு ஆதரவு திரட்டும் முனைப்புக்களை பிரித்தானியாவும், அமெரிக்காவும் தீவிரப்படுத்தியுள்ளன.

தீர்மானத்திற்கு பெரும்பான்மை ஆதரவினை திரட்டும் கடுமையான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய நாடுகள் செயலாளர் மார்ச் சிம்சன் தெரிவித்துள்ளார். பிரித்தானிய பாராளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சு மட்டத்தில் ஆதரவு திரட்டும் பணிகளை பிரித்தானியா மேற்கொள்ளும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னதாக யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணைகள் நடத்தப்படாவிட்டால், சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்றமை சரியானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: ,

Leave a Reply