மாகாணசபைக்கான எந்தவொரு அதிகாரங்களும் இதுவரை வழங்கப்படவில்லை!

vikineswaran5அதிகாரப்பகிர்வு என்பது ஒரு விடயம், 13 வது திருத்தச் சட்டம் என்பது இன்னொரு விடயம். வடக்கு, கிழக்கு அச் சட்டத்தின் கீழ் மாகாணசபையாக உருவாக்கப்பட்டது என வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கான அரசியலமைப்புக் கற்கை கருத்தரங்கு நேற்று பிற்பகல் 2 மணியளவில் யாழ் பொது நூலகத்தில் நடைபெற்ற போது முதலமைச்சர் இதனைத் தெரிவித்தார். இந் நிகழ்வு வட மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. மேலும் இதன் போது உரையாற்றிய முதலமைச்சர்,

மாகாணசபைக்கான எந்தவொரு அதிகாரங்களும் இதுவரை வழங்கப்படவில்லை. மாறாக13 ஐ திருத்தியமைக்க முயல்கின்றனர். இதற்கு இந்தியாவும், பல அரசியல் கட்சிகளும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. அதிகாரப் பகிர்வு என்பதை இந்த அரசாங்கம் ஒரு கையால் கொடுத்து மறு கையால் பறிக்கின்றது என்று தெரிவித்தார்.

மேலும் 13 ஆவது திருத்தம் மற்றும் அரசியலமைப்பு அதிகாரங்கள் தொடர்பான விரிவுரையை வைத்திய கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரட்ண மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்கினார். நிகழ்விற்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வைத்தியர், ஜெயம்பதி விக்கிரமரட்ண மற்றும் மாகாணசபையின் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Tags: ,

Leave a Reply