பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற தம்பதிகள் கடத்தல்: பிரிட்டிஷ் பொலிஸார் சென்னையில்

new y0rk
கடந்த ஆண்டு மே மாதம் 29ஆம் திகதி சென்னை விமான நிலையத்தில் தவராஜ் (59), சலஜா(55) என்ற பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற தம்பதியர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கடத்தப்பட்டனர்.

இவர்களை விடுவிப்பதற்கு 2.5 கோடி ரூபாய் பிணையத் தொகையாகக் கேட்கப்பட்டது.

இந்தக் கடத்தல் தொடர்பாக தமிழக பொலிஸார் 13 பேரைக் கைது செய்துள்ளனர்.

அஜந்தன் மற்றும் ரமேஷ் என்ற இலங்கை நாட்டவரை இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து யார்டு பொலிஸார் கைது செய்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சேகரிக்க ஸ்காட்லாந்து யார்டின் சிறப்பு விசாரணைப் பிரிவைச் சேர்ந்த கிரெய்க் மேகி, மார்க் ஹியுக்ஸ் மற்றும் இங்கிலாந்தின் தேசிய குற்றப் புலனாய்வு பிரிவின் சஞ்சய் மெய்னி ஆகிய மூவரும் புதுடெல்லியில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் பிரதிநிதி ஒருவருடன் இணைந்து இன்று தமிழக பொலிஸ் ஆணையாளர் எஸ்.ஜார்ஜை சந்தித்தனர்.

இந்த வழக்கு தொடர்பான அறிக்கைகள், மின்னஞ்சல் தகவல் பரிமாற்றங்கள் மற்றும் புகைப்படங்களை சேகரிப்பதற்காக இவர்கள் வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: , ,

Leave a Reply