நாடு ஆபத்தான நிலையில்: ராஜபக்ஷ அரசாங்கமே முழு பொறுப்பு – ஐதேக

unp2நாடு மிகவும் ஆபத்தான நிலைமையை எதிர்நோக்கியுள்ளது. இந்த நிலைமைக்கு ராஜபக்ஷ அரசாங்கம் முழுப் பொறுப்பினையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

நாடு பாதாளத்தில் வீழ்ந்துள்ளது. இறுதிக் கட்ட போரின் போது இடம்பெற்றதாக சுமத்தப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரப்படுகின்றது.

சர்வதேசம் இது தொடர்பில் பல தடவைகள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. எனினும், இதுவரையில் அரசாங்கம் காத்திரமான விசாரணைகளை நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நம்பகமான உள்ளக விசாரணைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவ்வாறான ஓர் முயற்சிக்கு ஐக்கிய தேசியக் கட்சி பூரண ஆதரவளிக்கும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆலோசனையைக் கேட்டிருந்தால் நாடு இவ்வளவு நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டியிருக்காது.

நாட்டின் அனைத்து மக்களினாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது. ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் ஐக்கிய தேசியக் கட்சி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

Tags: ,

Leave a Reply