வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி கற்றும் மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி நேற்றைய தினம்(13.02) மத்திய மகாவித்தியாலயத்தின் ஐயாத்துரை மண்டபத்தில் .டம்பெற்றது.


மாணவர்களின் தலைமைத்துவப் பண்பை கட்டியெழுப்பும் நோக்கோடு தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பகுதித் தலைவர் ம.ஜெயரூபன் தலைமையில் குறித்த செயலமர்வு நடைபெற்றது.
இச் செயலமர்வில் மாணவர்களுக்கான தியானப்பயிற்சி, தலைமைத்துவம், போக்குவரத்துச்சட்டம், உளவளதுறை தொடர்பான பயிற்சி, வெளிக்களபயணம், விளையாட்டு பயிற்சி போன்ற அம்சங்களை உள்ளடக்கி முழுநேர செயலமர்வாக காலை 8.30 இல் இருந்து மாலை வரை இடம்பெற்றது.
குறித்த செயலமர்வில் தேசிய கல்வியியற் கல்லூரியின் ஓய்வுபெற்ற உப பீடாதிபதி இன்பதேவராஜா, வைத்தியகலாநிதி எஸ்.சுதாகரன், வவுனியா வடக்கு ஆசிரியர் வளநிலையத்திக் முகாமையாளர் சு.ஜெயச்சந்திரன், போக்குவரத்து பொலிஸ் அதிகாரி கே.எம் கந்தசாமி, மனவளக்கலை பேராசிரியர் சி.சந்திரன் விளையாட்டு உத்தியோகத்தர்களான ரீ.அமலன் மற்றும் ரீ. கமலன் உட்பட உடற்கல்வி ஆரிசியர்களும் வனவாளர்களாகக் கலந்து மாணவர்களுக்கான செயலமர்வை திறம்படநாடாத்தினர்.
இச் செயலமர்வில் 500 மேற்பட்ட மாணவர்கள் தலைமைத்துவம், உளவளம், போக்குவரத்துசட்டம், விளையாட்டு போன்ற துறைகளில் பயிற்சி பெற்று பயனடைந்தனர்.
















