வாழைச்சேனை கடதாசி கம்பனியின் அலையில் தீ!

valai-fireவாழைச்சேனை கடதாசி கம்பனியின் அலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் அந்த ஆலைக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

சனிக்கிழமை மாலை 4.30. மணியளவில் இத் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. மீள் சுழற்சிக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 8 தொன் கடதாசிகள் உள்ளிட்ட பல பொருட்கள் எரிந்து முற்றாக சாம்பலாகியுள்ளது.

தீ விபத்து இடம்பெற்றுள்ளதையடுத்து இராணுவத்தினரும், பொலிஸாரும் மற்றும் தீயனைக்கும் படையினரின் முயற்ச்சியினால் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

சம்பள நிலுவை கோரி நிர்வாகத்திற்க்கு எதிராக ஆலை ஊழியர்களினால் அன்மையில் ஆர்ப்பாட்டம் செய்தமையையிட்டு கடந்த 2014.02.14ஆம் திகதி காலை 6.00 மணி தொடக்கம் 2014.02.17ஆம் திகதி காலை 6.00 மணி வரைக்கும் ஆலையை தற்காலிகமாக மூடிவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் பின்வரும் ஊழியர்களான நேரப்பதிவாளர்கள், பாதுகாப்பு ஊழியர்கள், ஆளிப்பலகை இயக்குனர்கள், சாரதிகள் வேலைக்கு சமுகமளி;த்தல் வேண்டும். அதற்காக அவர்கள் மேலதிக ஊதியம் பெற உரித்துடையவர்கள் என்றும் ஆலை நிர்வாகத்தினால் வெள்ளிக்கிமை ஆலை ஊழியர்களுக்கு அறிவித்தல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை ஊழியர்கள் இல்லாத நிலையில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது. இது குறித்து பல்வேறு சந்தேகங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: , ,

Leave a Reply