யாழ்ப்பாணத்தில் 3000-4000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன-

navatkuliயாழ்ப்பாணத்தில் 3000 முதல் 4000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக காணாமல் போதல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், முறைப்பாட்டாளர்கள் சாட்சியங்களை சமர்ப்பிப்பதற்கு திகதிகள் வழங்கப்பட உள்ளதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாச தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவடத்தில் ஆணைக்குழுவின் அமர்வுகளின் போது புதிதாக 450 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
கோப்பாய், சாவகச்சேரி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் இவ்வாறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனம் சகல முறைப்பாடுகளையும் பதிவு செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள், இராணுவத்தினர், ஈ.பி.டி.பி. ஏனைய துணை இராணுவக் குழுக்கள் உள்ளிட்ட் பல்வேறு தரப்பினருக்கு எதிராகவும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதிலும் 13700 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Tags: , ,

Leave a Reply