வாழைச்சேனை அந்நூர் தேசிய கல்லூரியின் இருபத்தேழாவது இல்ல விளையாட்டுப் போட்டி

Vala-sport1வாழைச்சேனை அந்நூர் தேசிய கல்லூரியின் இருபத்தேழாவது இல்ல விளையாட்டுப் போட்டி வியாழக்கிழமை கல்லூரியின் மைதானத்தில் இடம்பெற்றது.
Vala-sport2

Vala-sport3

Vala-sport4
கல்லூரியின் முதல்வர் கெப்டன் எம்.ரீ.எம்.அஸ்ரப் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, அதிதிகளாக ஓட்டமாவடி கோட்டக் கல்வி அதிகாரி எம்.சுபைர், மட்டக்களப்பு மத்திய கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கே.றகுமான் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இப்போட்டி நிகழ்ச்சிகளில் ஸீனத் (சிவப்பு) இல்லம் 319 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தையும், றஹ்மத் (நீலம்) இல்லம் 308 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தையும், நுஸ்ரத் (பச்சை) இல்லம் 303 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டது.

வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் இல்லங்களுக்கு கலந்து கொண்ட அதிதிகளால் பரிசில்கள் மற்றும் வெற்றிக் கேடயம் என்பன வழங்கி வைக்கப்பட்டது.

Tags: , ,

Leave a Reply