கூட்டு மீன்பிடியில் ஈடுபட நாங்கள் தயார்; இலங்கை அரசு அறிவிப்பு

srilankan fishersகூட்டு மீன்பிடியில் ஈடுபடுவதற்கான தீர்மானம் ஒன்று மிகவிரைவில் முன்வைக்கப்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அதன்படி கொழும்பில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் போது அதற்கான தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிக்கப்படும் அதேநேரம் இலங்கை மீனவர்களும் இந்திய கடற்பரப்பில் மீன்பிடிக்க அந்த நாட்டு அரசு அனுமதிக்க வேண்டும்.

எனவே இதன் மூலம் இரண்டு நாட்டு மீனவர்களும் கூட்டுத்தொழிலில் ஈடுபட வாய்ப்பு ஏற்படும்.

அத்துடன் இரண்டு நாட்டு மீனவர்களும் மாற்று நாடுகளின் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் போது பிடிக்கப்படும் மீன்கள் எந்த நாட்டு கடற்பரப்புக்கு சொந்தமானதோ அந்த நாட்டு துறைமுகத்துக்கு வருமானம் வரக்கூடிய அளவில் குறித்த மீன்களின் ஏற்றுமதிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

இந்த நடைமுறையினை பல்வேறு நாடுகள் பின்பற்றி வருகின்றன.இதனால் அந்த நாடுகள் அதிக இலாபத்தை ஈட்டக்கூடியதாகவும் உள்ளது. என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: , , ,

Leave a Reply