ராஜபக்ஷக்களினால் அதிகாரமின்றி இருக்க முடியாது – ஜே.வி.பி.

Anura-Kumara-Dissanayakeராஜபக்ஷக்களினால் அதிகாரமின்றி இருக்க முடியாது என ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க போன்றோர் அதிகாரம் இன்றி இருந்துவிடுவார்கள் என ஜே.வி.பி.யின் புதிய தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும், ராஜபக்ஷ சகோதரர்களினால் அதிகாரம் இன்றி இருக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷக்கள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அவ்வாறு குற்றம் இழைத்த காரணத்தினால் பதவியை விட்டுக் கொடுக்க அஞ்சுவதாகத் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் வேறும் ஒருவர் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினால் விசாரணைகள் நடத்தப்படும் என்ற அச்சத்தினால், ராஜபக்ஷக்கள் இவ்வாறு அதிகாரத்தை துறக்க அஞ்சுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ஏதாவது ஓர் வழியைப் பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்வதில் அரசாங்கம் நாட்டம் காட்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

17;ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்து, சுயாதீன ஆணைக்குழுக்களை வலுவிழக்கச் செய்து, 18ம் திருத்தச்சட்டத்தை இதன் காரணமாகவே அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அரசியல் சாராத ஓர் போராட்டம் நடத்தப்பட்டால் கூட அரசாங்கம் பீதியடைந்து விடுவதாகத் தெரிவித்துள்ளார்.

ரத்துபஸ்வல, சிலாபம், கட்டுநாயக்க போன்ற பிரதேசங்களில் இடம்பெற்ற சமூகப் பொருளாதாரத்தை வலியுறுத்திய போராட்டங்களை அரசாங்கம் கட்டுப்படுத்திய விதம் இதற்கான சிறந்த உதாரணமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்ஷக்களின் பிம்பங்களை ஊடகங்கள் பூதாகாரமாக்கி காண்பித்து வருவதாகவும் மெய்யாக அவ்வாறான ஓர் நிலைமை கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களுக்கு லஞ்சம் வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

சிரேஸ்ட ஊடகவியலாளர் ஒருவரின் பிள்ளைகள் ஜனாதிபதியின் நிதி உதவியில் வெளிநாட்டில் கல்வி பயில்வதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் குற்றச் செயல்களில் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது,

குற்றவாளிகளை கண்டு பிடித்து தண்டிப்பதற்கு காவல்துறையினர் தயக்கம் காட்டினால் அந்தக் குற்றச் செயல்களுடன் அரசாங்கத் தரப்பு சம்பந்தப்பட்டிருப்பது வெளிச்சமாகின்றது என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Tags: , , ,

Leave a Reply