வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கடலில் ஒருவர் தவறி விழுந்து உயிரிழப்பு

fissher-val1வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கடலில் செவ்வாய்கிழமை மீனவர் ஒருவர் தவறி விழுந்து நண்பகல் 12 மணியளவில் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
fissher-val2
வாழைச்சேனை செம்மண்ணோடைக் கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான முஹம்மது தாஹிர் இஸ்மாயில் (வயது 34) என்பவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கடற்றொழிலில் ஈடுபடும் குறித்த நபர் ஆழ்கடலில் மீன்பிடித் தொழிலுக்காக கடந்த சனிக்கிழமை சென்று திங்கட்கிழமை கரைக்கு வந்துள்ளார். இந்நிலையில் படகிருந்த வலைகளில் உள்ள திருத்த வேலையில் செவ்வாய்கிழமை காலை 7.00 மணி முதல் ஈடுபட்டு வந்த சந்தரப்பத்தில் படகிலிருந்து இவர் தவறி ஆற்றில் விழுந்துள்ள நிலையில் நீரில் மூழ்கி குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்கான வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: , ,

Leave a Reply